மழை பாதிப்பு: முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கிறது - ராதாகிருஷ்ணன் பேட்டி

மழை பாதிப்பு: முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கிறது - ராதாகிருஷ்ணன் பேட்டி
ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: December 2, 2019, 12:26 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் பெய்துவரும் மழை குறித்தும் அதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கடந்த வியாழக்கிழமை முதலே வானிலை நிலவரங்களை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தி வருகிறோம்.


இன்று காலை வந்த வானிலை நிலவரத்தின் படி தமிழகத்தின் உள் பகுதிகளில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர் மழையினால் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளை 430 இடங்களை கண்டறிந்துள்ளோம். அதேபோல் பழைய கட்டிடங்கள், கட்டும் கட்டுமான பணிகளில் உள்ள கட்டிடங்கள், பழைய சுவர்கள் இடிந்து விழக்கூடிய சூழலில் இருக்கும் இடங்களை எல்லாம் கண்டறிந்து தகவல் கொடுத்துள்ளோம்.

மேட்டுப்பாளையம் நடுவூர் பகுதியில் பாறை உருண்டு விழுந்து 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது?

இந்த அசம்பாவிதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு துறை, காவல்துறையினர் அதிக அளவில் அந்த பகுதிக்கு மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ' Do's and Dont's ' தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேறும் போது அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.

இன்றைய வானிலை பொருத்தவரை குன்னூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு 1070 மற்றும் 1077 மூலமாக தகவல் கிடைக்கும் போது அந்தந்த துறைக்கு அனுப்பி, 12 துளைகள் மூலமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் பாறை உருண்டு வந்து அதில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தநிலையில் அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற கூரை வீடுகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மாவட்ட ஆட்சியருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளோம்.

மேலும் இந்தப் பகுதி மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெறும் கட்டிடங்களுக்கு கீழே நிற்க கூடாது என்பது போன்ற அறிவுரைகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான முடிச்சூர் சேலையூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதற்காக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களை நேரடியாக சென்று அந்த பகுதிகளை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம். பொதுப்பணித்துறையோடும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்று வடிந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Also see...
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading