சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு பிறந்தநாளன்று விடுமுறை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு பிறந்தநாளன்று விடுமுறை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: September 8, 2020, 1:49 PM IST
  • Share this:

சென்னை காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பிறந்தநாளன்று விடுமுறை வழங்கப்படும் என்று  காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.


சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், காவல் துறையினர், தங்கள் பணியை உற்சாகமாக மேற்கொள்ளும் வகையில், பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது, பிறந்த நாள் கொண்டாடும், அனைத்து காவலர் மற்றும் அதிகாரிகளுக்கும், அன்றைய தினத்தில், அவரது கையெழுத்திட்ட, பிறந்த நாள் வாழ்த்து அட்டையை வழங்கி, உற்சாகப்படுத்தி வருகிறார்.


அதில், 'பிறந்த நாள் காணும் தங்களுக்கு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். பெருமையும், பாரம்பரியமும் மிக்க, சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் தாங்கள், நல்ல உடல் நலமும், நீடித்த ஆயுளும், நிறைவான மகிழ்வும் பெற்று, வாழ வாழ்த்துகிறேன்' எனக் குறிப்பிட்டு வாழ்த்து அட்டையை அனுப்பி வருகிறார்.Also read... Gold Rate | தங்கத்தின் விலை இன்று குறைந்தது

இந்நிலையில் சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்கி போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.பிறந்த நாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தென் மண்டலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை அலுவலர் மற்றும காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்கப்படும் என்றும் மதுரை ஐஜி முருகன் தெரிவித்துள்ளார்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading