• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விநாயகர் சிலையை கடலில் கரைக்க தனிநபர்களுக்கு அனுமதி: சென்னை போலீஸ்

விநாயகர் சிலையை கடலில் கரைக்க தனிநபர்களுக்கு அனுமதி: சென்னை போலீஸ்

  • News18
  • Last Updated :
  • Share this:
விநாயகர் சிலைகளை கரைக்க  கடலில் தனி நபராக வந்தால் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெரினா , கலங்கரை விளக்கம் அருகே செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று மதியம் ஆய்வு செய்து பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளதாகவும், போலீசாருக்கு அனைத்து அமைப்புகளும், மக்களும் ஒத்துழைப்பு அளித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஒன்று இரண்டு இடங்களில்  தடையயை மீறி சிலை வைக்க முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு அவர்களின் வீடுகளில் சிலையை வைத்துக்கொண்டதாகவும், எனினும் ஒரு சில வழக்குகள் போடப்பட்டுள்ளது என்றார்.

Also read... முகக்கவசம், சானிடைசர் பாட்டிலுடன் விழிப்புணர்வு விநாயகர் சிலை.. சிறப்பு பூஜையுடன் வழிபாடு...

மேலும், நீதி மன்ற தீர்ப்பின் படி சிலைகளை கடலில் கரைக்க தனி நபராக வந்தால் அனுமதிப்போம், எனினும் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சிலை கரைக்க அனுமதி இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.



சென்னையில் புழக்கத்திலுள்ள கஞ்சா, குட்கா, ரவுடிசம் போன்றவற்றை முற்றிலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: