மாணவி தற்கொலை: ஐஐடி பேராசிரியர் பத்மநாபனிடம் காவல் ஆணையர் நேரில் விசாரணை!

மாணவி தற்கொலை: ஐஐடி பேராசிரியர் பத்மநாபனிடம் காவல் ஆணையர் நேரில் விசாரணை!
  • News18
  • Last Updated: November 14, 2019, 1:21 PM IST
  • Share this:
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் பத்மநாபனிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீம் சென்னை ஐஐடியில் இளங்கலை முதலாம் ஆண்டு மானுடவியல் படித்து வந்தார். கடந்த 9-ம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் தூக்கில் தொங்கியபடி இவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது செல்போன் குறுஞ்செய்தியில் மத ரீதியாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவி குறிப்பிட்டிருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.


இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடமும் அவரது பெற்றோர் புகார் தெரிவித்ததை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்திற்கு நேரில் சென்ற சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேராசிரியர் பத்மநாபனிடம் விசாரணை மேற்கொண்டார்.

Also see...
First published: November 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading