தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறப்பு: 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறப்பு: 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

மாதிரிப் படம்

கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 8-ம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத பாதியிலிருந்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், அந்த ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டுவந்துள்ளது.

    இந்தநிலையில், ஜனவரி 18-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிகளுக்கு உறுதியாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பிப்ரவரி 8-ம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, பிப்ரவரி 8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பெட்ரோல் பங்குகள் நேரக்கட்டுபாடின்றி தொடர்ந்து இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: