• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கல்லூரிகள்: தமிழக அரசின் அடுத்த அதிரடி!

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கல்லூரிகள்: தமிழக அரசின் அடுத்த அதிரடி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திமுக அரசு அமைந்ததில் இருந்து கோவில் விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

  • Share this:
    கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் விரைவில் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    சென்னை எழும்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,   திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை அப்படியே விட்டுவிடாமல்,  அந்த இடங்களை வணிக இடங்களாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் கோயில்களை சிறந்த முறையில் பராமரிக்க  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  செயல் வகுத்துள்ளார் என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் இடத்தில் விரைவில் கல்லூரி கட்டப்படும் என்று தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, இதேபோல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் கல்லூரிகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கை: எப்போது வெளியீடு?

    திமுக அரசு அமைந்ததில் இருந்து கோவில் விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள  கோயில் நிலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. பழமையான கோவில்களை புனரமைப்பது, கோவில் நிலங்களை மீட்பது ஆகியவற்றில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும் படிக்க: 1,000 ஆண்டுகள் பழமையான கவிச்சக்கரவர்த்தி கம்பர் நினைவிடத்தின் அவலம்.. கண்டுகொள்ளுமா அரசு?


    இதேபோல், கோயில்களுக்கு காணிக்கையாக செலுத்தப்படும் தங்கம்  எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.  2 ஆயிரம் கிலோ தங்கம் எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருப்பதாகவும் இவற்றை உருக்கி தங்க பிஸ்கெட்களாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு அண்மையில் கூறியிருந்தார்.

    இதன் மூலம் அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு சுமார் 20 கோடி ரூபாய்  வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: