Home /News /tamil-nadu /

கொரோனாவால் கல்லூரிகளுக்கு விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மாணவ- மாணவிகள்- சென்னையில் அலைமோதிய கூட்டம்

கொரோனாவால் கல்லூரிகளுக்கு விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மாணவ- மாணவிகள்- சென்னையில் அலைமோதிய கூட்டம்

கல்லூரி மாணவிகள்

கல்லூரி மாணவிகள்

Chennai | கொரோனா தொற்றால் கல்லூரிகளுக்கு விடுமுறை சொந்த ஊர்களுக்கு செல்லும் கல்லூரி மாணவ- மாணவிகள் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

கொரோனா, ஒமைக்ரான் பரவலை அடுத்து இன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்படுள்ளது. இந்த ஊரடங்கில் 50% பொதுப் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து வகை பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 20-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சென்னை மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து புதிய பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் அலைமோதிகின்றன.
மேலும் அரசு பேருந்துகளில் 50% பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறபித்தாலும் குறைவான அரசு பேருந்துகள் மட்டுமே தென்மாவட்டங்களுக்கு இயக்கபடுவதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் முண்டியடித்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.. விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்



 மேலும் சில பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து அரசுப் பேருந்துகளில் செல்வதாகவும் வேதனை தெறிவிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பேருந்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளன.

மேலும் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் கொரோனா அச்சம் இன்றி உள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக செல்வதால் மேலும் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Chennai, CoronaVirus

அடுத்த செய்தி