ஓசூரில் பப்ஜி விளையாட்டில் அடிமையாக இருந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: தவிக்கும் வாய்பேச முடியாத தாய்

ஓசூரில் பப்ஜி விளையாட்டில் அடிமையாக இருந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: தவிக்கும் வாய்பேச முடியாத தாய்

பப்ஜி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர், வாய்பேச முடியாத ஜெயலட்சுமி. ஜெயலட்சுமியின் கணவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட கஷ்டமான சூழ்நிலையில் இரண்டு மகன்களை வளர்த்து வருகிறார். மூத்த மகன் விஷ்வா(18) பெங்களூரில் வேலை செய்து வரும் நிலையில் இளைய மகன் ரவி(16) ஒசூர் அரசு தொழிற்கல்லூரியில் (ITI) கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். ஆன்லைன் வகுப்பு எனக்கூறி மொபைல் போனை உபயோகித்து வந்த ரவி நண்பர்களுடன் குழுவாக இணைந்து பப்ஜி விளையாட்டில் அதிக மோகம் கொண்டு எந்நேரமும் கைப்பேசியில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

  சித்தப்பா, தாய் என பலமுறை கண்டித்தும் வீட்டில் தனிமையாக இருக்கும் ரவி பப்ஜியிலேயே மூழ்கி உள்ளார். தாய் ஜெயலட்சுமி கட்டிட வேலைக்கு சென்று இன்று மாலை வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டின் உள்பக்கம் தாளிட்டு நீண்டநேரமாக கதவு திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினரை அழைத்து ஜெயலட்சுமி கதவு திறந்ததில் ரவி, வீட்டில் உள்ள மின்விசிறியின் தாயின் புடவையை கொண்டு தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  வாய் பேசமுடியாத தாய் ஜெயலட்சுமி செய்வதறியாமல் கதறி அழுதது பார்ப்போரின் இதயத்தை கலங்க வைத்தது.

  மத்திய அரசு பப்ஜி விளையாட்டை தடை செய்தாலும் பல்வேறு தொழில்நுட்பங்களினாலும், வைப்சைட்டுகளிலும் பதிவிறக்கம் செய்யும் மாணவர்கள் நாட்டின்(Country) பெயரை மாற்றி விளையாடி வருவது தொடர்கிறது. இளைஞர்கள், மாணவர்களின் நலன்கருதி அனைத்து வெப்சைட்டுகளிலும் இதுபோன்ற விளையாட்டு ஆப்புகளை பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் மேலும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்ட பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  சம்பவமறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒசூர் நகர போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: