• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மது போதையில் பைப்பை பிடித்து ஏறிய கல்லூரி மாணவர்.. 8வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்!

மது போதையில் பைப்பை பிடித்து ஏறிய கல்லூரி மாணவர்.. 8வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்!

மதுபோதை

மதுபோதை

மிகுந்த போதையில் இருந்த நவீன்குமார் நிலைதடுமாறி எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

  • Share this:
    செம்பரம்பாக்கத்தில் மது போதையில் கல்லூரி மாணவர் 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.  நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு அறைக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்.

    ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரவீன்குமார்(21), இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.டெக் பயோ மெடிக்கல் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியுள்ளார். நேற்று இரவு பக்கத்து அறையில் தங்கி உள்ள நண்பரின் பிறந்த நாள் என்பதால் அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி விட்டு நண்பர்கள் அனைவரும் மது போதையில் இருந்துள்ளனர்.

    மேலும் நவீன்குமார் தங்கியுள்ள அறையின் சாவி மற்றொரு நண்பரிடம் இருந்ததாலும் அவர்கள் அதிக போதையில் இருந்ததாலும் இந்த அறையில் அதிக நண்பர்கள் இருந்ததால் இங்கு படுக்க வேண்டாம் என தனது அறைக்கு செல்வதற்காக எட்டாவது மாடியில் உள்ள பிறந்த நாள் கொண்டாடப்பட்ட அறையின் பின் வழியாக உள்ள பைப்பை பிடித்து கொண்டு சென்றால் பிரவீன்குமார் தங்கியுள்ள அறையின் பின் பக்கம் சென்று விடலாம் என்பதால் போதையில் இருந்த பிரவீன்குமார் வழக்கம்போல் அறையின் பின்புறம் வழியாக செல்லும் போது மிகுந்த போதையில் இருந்த நவீன்குமார் நிலைதடுமாறி எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    Also read:  கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 15 பேர் பலி!

    இதை கண்டதும் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன நவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் தங்கி இருப்பதாகவும் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழங்குவதாகவும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: