ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவர்... கடவுள் கூறியதாக பாட்டியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்

Youtube Video

ஆன்லைன் விளையாட்டால் மனச்சிதைவு ஏற்பட்ட இளைஞர், நான் கடவுள் என்றும் கடவுள் சொன்னதால் பாட்டியை கொன்றேன் என்றும் கூறினார்.

 • Share this:
  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பூ.கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவரின் மகன் ஹரிஹரன். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா நோய்தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாததால் ஆன்லைனில் படித்து வந்திருக்கிறார். வகுப்பு நேரம் போக மீதியுள்ள நேரங்களில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு அதற்கு அடிமையாகி உள்ளார். சில நாட்களாக ஹரிஹரனின் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட, அவரை மருத்துவரிடம் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது ஹரிஹரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. சில நாள் சிகிச்சைக்கு பின்னர் ஹரிஹரனை உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அவரது பாட்டி வீட்டில் கொண்டு போய் விட்டனர்.

  அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன் சில நாட்களாக மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனநோய் முற்றிப்போய் ஒரு கட்டத்தில் நான்தான் கடவுள் என்று பிதற்ற தொடங்கியுள்ளார். இந்நிலையில் அன்றைய தினம் இரவே பாட்டியின் முதுகில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்ற விபரீத எண்ணம் ஹரிஹரனுக்கு தோன்றியுள்ளது. அதற்காக உறங்கி கொண்டிருந்த பாட்டியின் மாரியின் தலையிலும், நெஞ்சிலும் கல்லால் பலமாக தாக்கி உள்ளார்.

  மேலும் படிக்க... அமைச்சரின் ஆதரவாளர்கள் 7 பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

   

  பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பாட்டியின் முதுகில் அமர்ந்திருந்த ஹரிஹரன் நான் கடவுள் என்றும் கடவுள் சொன்னதால் பாட்டியை கொன்றேன் என்றும் கூறியுள்ளார். யாராவது அருகில் வந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஹரிஹரனை யாரும் நெருங்க முடியாததால் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாட்டி மாரி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரிஹரனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: