மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் காதல்.. 40 வயது நபருடன் 20 வயது இளம்பெண் ஓட்டம்
மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் காதல் வயப்பட்ட 20 வயது இளம்பெண் 40 வயது நபருடன் மாயமாகியுள்ளார்.
- News18 Tamil
- Last Updated: August 10, 2020, 5:21 PM IST
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சீனிவாசன். மலையேற்றப் பயிற்சியாளராக உள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் ராஜூலூ கண்டிரிகா கிராமத்தில் ஜீவாதார் என்ற தொண்டு நிறுவனம் உள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபு சுந்தரம் என்பவர் அந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக உள்ளார். ஆரோக்கியான் என்ற மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தை சீனிவாசன் உடன் சேர்ந்து பிரபு சுந்தரம் கூட்டாக நடத்தி வந்தார்.
இரண்டரை ஆண்டுகளாக ஆந்திராவில் நடத்தி வந்த ஆரோக்கியான் மலையேற்றப் பயிற்சிக்கு சென்னை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் சென்றுள்ளார். அங்கு 40 வயதுடைய பயிற்சியாளர் சீனிவாசன் 20 வயதான இந்த மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
சீனிவாசனை திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்து திருமுல்லைவாயலில் இருந்து குடும்பத்தினருக்குத் தெரியாமல் அந்த மாணவி வெளியேறினார். நாகலாபுரம் மண்டலம் சடுகுடு மடகு நீர்வீழ்ச்சி ஒட்டி அமைந்த ஆசிரமத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் சென்றனர். சீனிவாசன் திருமணம் செய்துகொள்ள தஞ்சம் தேடி சென்றபோது, வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி, திருமணம் செய்து வைக்க ஆசிரம நிர்வாகி பிரபு சுந்தரம் மறுத்துள்ளார். மேலும், மாணவி குடும்பத்தினருக்கு பிரபு சுந்தரம் தகவலும் அளித்துள்ளார். பெற்றோர் சென்று மகளுக்கு அறிவுரை கூறி அழைத்து வந்தனர்.
Also read: சமூக வலைதளம் மூலம் காதல்... மயிலாடுதுறை சிறுமி மாயம்... அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வலைவீச்சு
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சீனிவாசனை திருமணம் செய்துகொள்ளப் போவதாக பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு அந்த மாணவி மாயமாகியுள்ளார். பதறிய பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர். போலீசார் ராஜூலூ கண்டிரிகா கிராமத்திற்குச் சென்று ஜீவாதார ஆசிரமத்தில் சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.அங்கிருந்த யோகா ஆசிரியரும் ஆசிரம நிர்வாகியுமான பிரபு சுந்தரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த காரை பறிமுதல் செய்த போலீசார், பிரபு சுந்தரை திருமுல்லைவாயல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
கடந்த முறை பெற்றோரிடம் மாட்டிவிட்டதால், இந்த முறை பிரபு சுந்தரத்தை போலீசாரிடம் சிக்கவைத்துவிட்டு, காதல் ஜோடி வேறு இடத்திற்கு சென்றுவிட்டது தெரிய வந்தது. மாயமான காதலர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாததால் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இரண்டரை ஆண்டுகளாக ஆந்திராவில் நடத்தி வந்த ஆரோக்கியான் மலையேற்றப் பயிற்சிக்கு சென்னை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் சென்றுள்ளார். அங்கு 40 வயதுடைய பயிற்சியாளர் சீனிவாசன் 20 வயதான இந்த மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
சீனிவாசனை திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்து திருமுல்லைவாயலில் இருந்து குடும்பத்தினருக்குத் தெரியாமல் அந்த மாணவி வெளியேறினார். நாகலாபுரம் மண்டலம் சடுகுடு மடகு நீர்வீழ்ச்சி ஒட்டி அமைந்த ஆசிரமத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் சென்றனர்.