சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் உள்ள அரசு கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வாண்டியாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து சிறிது காலம் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.கடந்த சில தினங்களாக சொந்த ஊரான தெற்கு பிச்சாவரத்தில் இருந்துள்ளார்.
இன்று காலை மாணவி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி இறக்கும்போது கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், தான் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவரது தாய் மற்றும் உறவினர்கள், காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மேஜையில் செல்போன் கொலுசு, கடிதம் இருந்ததாகவும், பின்னர் மகளைக் காணாமல் வீட்டின் பின்பக்கம் சென்று தேடியபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியவர், அவர் கடிதத்தில் குறிப்பிட்டபடி இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.