• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • காதலிக்கக்கூறி நெருக்கடி கொடுத்த இளைஞர்.. மாணவி தற்கொலை

காதலிக்கக்கூறி நெருக்கடி கொடுத்த இளைஞர்.. மாணவி தற்கொலை

காதலிக்கும்படி இளைஞர் நெருக்கடி.. மாணவி தற்கொலை..

காதலிக்கும்படி இளைஞர் நெருக்கடி.. மாணவி தற்கொலை..

நாமக்கல் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லுாரி மாணவியை, இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து காதலிக்கும்படி நெருக்கடி கொடுத்து வந்ததால் மாணவி திடீரென துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 • Share this:
  19 வயதே ஆன அனிதாவை காதலிக்கும்படி நெருக்கடி கொடுத்துள்ளார் இளைஞர் வல்லரசு. 4 ஆண்டுகளாகத் தொடர்ந்த நெருக்கடியைத் தாங்க முடியாத கல்லுாரி மாணவி அனிதா, தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள குச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர், 19 வயதான அனிதா. இவர், மோகனூர் சாலையில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தார்.

  இந்நிலையில், செவ்வாய்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாலை 5 மணிக்கு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவின் தங்கை வீட்டிற்கு வந்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார்.

  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்ட நிலையில், அங்கு அனிதாவை ஒருதலையாகக் காதலித்த 21 வயதான வல்லரசு, அவரது நண்பர்கள் 21 வயதான அய்யமுத்து, 20 வயதான கோகுல்நாத் ஆகியோர் வந்துள்ளனர்.

  உறவினர்கள் அவர்களைப் பிடித்து விசாரித்து சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ளனர். மூவரையும் அங்கிருந்தவர்கள் பிடித்துக் கட்டி வைக்க முயன்றபோது கோகுல்நாத் தப்பியோடி விட்டார். தகவல் அறிந்து வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் அனிதாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

  இளைஞர்களைப் போலீசார் அழைத்துச் செல்ல முயன்றபோது உறவினர்களும் பொதுமக்களும் அவர்களைத் தடுத்து நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மணிநேரமாக நடந்த சாலை மறியலின் இறுதியில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையால், உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

  பிடிபட்ட இளைஞர் வல்லரசிடம் போலீசார் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. வல்லரசும் அனிதாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்த போது காதலித்து வந்துள்ளனர். 10ம் வகுப்பு வரை காதல் தொடர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அனிதா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, அவர் வல்லரசை காதலிக்க மறுத்து விட்டார்.

  எனினும் வல்லரசு விடாமல் அடிக்கடி அனிதாவை பின்தொடர்ந்து தன்னைக் காதலிக்கும்படியும் திருமணம் செய்து கொள்ளும்படியும் வலியுறுத்தி வந்ததாகத் தெரிகிறது. அனிதா கல்லுாரி சென்ற பின்பும் நெருக்கடி தொடர்ந்த நிலையில் இதுகுறித்து தன் வீட்டில் அவர் எதுவும் சொல்லவில்லை.

  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வல்லரசின் நெருக்கடி அதிகரிக்கவே கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அனிதா இவ்வாறு நெருக்கடி கொடுத்தால், தான் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்தச் சூழலில் தான் அனிதா வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் போலீசார்.

  மேலும் படிக்க....தொடரும் கலைக்கலைப்பு கொடூரம்... விசாரணைக்கு உத்தரவு

  உறவினர்கள் தாக்குதலில் காயமடைந்த வல்லரசும், அய்யமுத்துவும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காதலி்க்க மறுத்த கல்லுாரி மாணவிக்கு இளைஞர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் மாணவி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: