உதயநிதி ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த கல்லூரி மாணவிகள்..!

திருமண மண்டபம் ஒன்றில் கல்லூரி மாணவிகளுடான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

உதயநிதி ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த கல்லூரி மாணவிகள்..!
உதயநிதி ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுத்த மாணவிகள்
  • Share this:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்வதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை வந்தார். அங்கு, தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கல்லூரி மாணவிகளுடான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து, மாணவிகளுடன் குழுப்புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக மாணவிகள் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க மாணவிகளுடன் போட்டா போட்டியிட்டுக்கொண்டு குவிந்தனர். இதையடுத்து, அவருடன் வந்திருந்த மகளிர் பாதுகாப்புக்குழுவினர் மாணவிகளை அப்புறப்படுத்தினர்.
மேலும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது 27-வது குருமகா சந்நிதானம் உதயநிதி ஸ்டாலினுக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து, தமிழ்க்கடவுள் சேயோன் (முருகன் பாமாலை) என்ற மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

1972-ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது தருமபுரம் ஆதீனமடத்தில் கலைஞர் மு.கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதி ஸ்டாலினுக்கு 27-வது குருமகாசன்னிதானம் வழங்கினார்.

இதை தொடர்ந்து, 26-வது குருமகா சந்நிதானம் முக்தியடைந்து ஓராண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து வெளியிடப்பட உள்ள குருபூஜை மலருக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை உதயநிதி ஸ்டாலின் குருமகா சந்திதானத்திடம் வழங்கி ஆசி பெற்றார்.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading