• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கல்லூரி தாளாளரே மாணவிக்கு பாலியல் தொல்லை..பகீர் பின்னணி

கல்லூரி தாளாளரே மாணவிக்கு பாலியல் தொல்லை..பகீர் பின்னணி

குற்றம்

குற்றம்

திண்டுக்கல் அருகே தனியார் கல்லுாரியில் மாணவியருக்கு தாளாளர், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகள் கல்லுாரியை மூடி சீல் வைத்துள்ளனர். விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Share this:
    திண்டுக்கல் - பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில், சுரபி நர்சிங் கல்லூரி உள்ளது. இதன் தாளாளர் ஜோதி முருகன். இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் சினிமா தயாரிப்பாளராக உள்ள ஜோதிமுருகன், 10 படங்களில் கவுரவ வேடங்களில் நடித்தும் உள்ளார் சுரபி கல்லுாரி தவிர, ராமபிரபா கலைக் கல்லூரி, கவி பாலிடெக்னிக், சுரபி கேட்டரிங் கல்லுாரி என பலகல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், சுரபி நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இந்தத் தகவல் அறிந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை கல்லுாரி வளாகத்தில் வைத்தே ஜோதிமுருகனை அடித்துத் தாக்கினர். விவகாரம் விஸ்வரூபம் எடுத்து மாணவ, மாணவியர் சாலை மறியல் மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜோதிமுருகனைக் கைது செய்யும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, ஜோதி முருகன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

    மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி லதா தலைமையில் திண்டுக்கல் காவல்துறை டிஐஜி விஜயலட்சுமி ஆகியோர் கல்லூரியில் தங்கியுள்ள மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோரிடம் சனிக்கிழமை காலை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தாளாளர் ஜோதிமுருகன் விரைவில் கைது செய்யப்படுவார்; அதன்பின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு விசாரணை குழு அமைத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி லதா உறுதியளித்தார்

    இதனை ஏற்றுக் கொண்ட மாணவர் தரப்பினர் தங்களது ஊர்களுக்கு செல்ல முன்வந்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு அரசு பேருந்துகள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் வரை மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கல்லுாரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தலைமறைவான கல்லுாரி தாளாளர் ஜோதிமுருகனைப் போலீசார் தேடி வருகின்றனர்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: