மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய மாணவர்கள்

மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய மாணவர்கள்

தீபாவளியை கொண்டாட முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் 100 பேருக்கு கல்லூரி மாணவர்கள் அரிசி மற்றும் புதிய ஆடைகளை வழங்கினர்.

தீபாவளியை கொண்டாட முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் 100 பேருக்கு கல்லூரி மாணவர்கள் அரிசி மற்றும் புதிய ஆடைகளை வழங்கினர்.

 • Share this:
  திருவள்ளூர் மாவட்டம் நெய்வேலி கிராமத்தில் கொரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போதிய வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளும் பிற ஆதரவற்றோர்களும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலையில் இருந்துள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் வகையில் உதவி செய்யும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுக்க முடிவெடுத்தனர்.

  Also read: கோவையில் பட்டாசு விற்பனை மந்தம் - விற்பனையாளர்கள் வேதனை

  அரிசியும் புதிய ஆடைகளும் வாங்கி தீபாவளி தினமான இன்று காலை அவர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 100 பேருக்கு இவ்வாறு தீபாவளிப் பரிசு வழங்கப்பட்டதாக மாணவர்கள் கூறினர்.

  சிறு நிகழ்ச்சி போன்று நடந்த அந்த பரிசுப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வில், திரைப்பட வில்லன் நடிகர் சரண் கலந்துகொண்டார்.
  Published by:Rizwan
  First published: