உளுந்தூர்பேட்டை அருகே பாட்டியை கல்லால் அடித்துக் கொன்ற கல்லூரி மாணவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பாட்டியை கல்லால் அடித்துக் கொன்ற கல்லூரி மாணவர் கைது

மாதிரி படம்

ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனது பாட்டியை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பூ. கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவரின் மகன் ஹரிஹரன். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரி மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. அதனால் வகுப்புகளை ஹரிஹரன் ஆன்லைன்  மூலமாக கவனிக்க தொடங்கினார். அப்படியே வகுப்பு நேரம் போக செல்போனில் கேம் விளையாட தொடங்கினார். பின்னர் ஆன்லைன் கேமில் அதிக ஆர்வம் கொண்டு இரவு பகல் முழுவதும் கேம் விளையாட்டில் தன்னை முழுமையாக அடிமையாகிக் கொண்டார். ஒரு கட்டத்தில் தன்னை அறியாமலேயே தாய், தங்கை, தந்தை இடம் அதிகளவு கோபம் கொண்டு அடிக்கடி சண்டையும் போட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஹரிஹரனின் தந்தை மண்ணாங்கட்டி தன் மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதா என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

  அங்கு பரிசோதித்த மருத்துவர், ஹரிஹரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதனால் உடனே சிகிச்சைஅளிக்க தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு ஓரளவு குணமடைய இனிமேல் நீங்கள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறலாம் என்று மருத்துவர் கூறினார். இனதால், ஹரிஹரனை தன் வீட்டிற்கு கொண்டு வந்தனர் பெற்றோர். தன் வீட்டில் இருந்தால் மகன் சீக்கிரம் குணமடைய மாட்டான் என்றும் பாட்டியுடன் சேர்ந்து இருந்தால் மகன் விரைவில் குணமடைவான் என்றும் கருதிய பெற்றோர்அவனை எலவனாசூர்கோட்டை அருகேயுள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

  இந்நிலையில், சில நாட்களாக ஹரிஹரன் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளாமல் மனநோய் முற்றி ‘நான்தான் கடவுள்’ என்று பிதற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் பாட்டியின் முதுகில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்று நினைத்த ஹரிஹரன், உறங்கி கொண்டிருந்த பாட்டி மாரியின் தலையில் கல்லால் அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் பாட்டி மாரி.

  மேலும் படிக்க...Coronavirus | தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பாதிப்பு : 2 ஆசிரியை, ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி

  பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பாட்டியின் முதுகில் அமர்ந்திருந்த ஹரிஹரன் நான் கடவுள் என்றும் கடவுள் சொன்னதால் பாட்டியை கொன்றேன் என்றும் கூறியுள்ளார். யாராவது அருகில் வந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.  ஹரிஹரனை யாரும் நெருங்க முடியாததால் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாட்டி மாரி பரிதாபமாக உயிரிழந்தார்.  அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரிஹரனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: