Home /News /tamil-nadu /

பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பனிப்போர்... குடும்ப அரசியல் குறித்த பிரதமர் உரைக்கு மாணிக்கம் தாகூர் விமர்சனம்

பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பனிப்போர்... குடும்ப அரசியல் குறித்த பிரதமர் உரைக்கு மாணிக்கம் தாகூர் விமர்சனம்

மாணிக் தாகூர் எம்.பி

மாணிக் தாகூர் எம்.பி

இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒன்றை மோடி  செய்திருக்கிறார். சுதந்திர தின விழா மேடையில் குடும்ப அரசியல் குறித்து பேசி இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாரத பிரதமர் சுதந்திர தின உரையில் அரசியல் குறித்து பேசியது பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவிற்கும் உள்ள பனிப்போர் என்பது போல தெரிகிறது என கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியார்களிடம் தெரிவித்தார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கான சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் கள்ளிக்குடி தாலுகாவாக மாறி நான்காண்டு ஆகியும் இன்னும் மருத்துவமனை தரம் உயர்த்தப்படவில்லை. தாலுகாவாக மாறுவதற்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களே இன்று வரை இருக்கிறது. முன்னாள் அமைச்சரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் செயல்பாடுகளுக்கு இது ஒன்றே சாட்சியாக விளங்குகிறது என குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத ஒன்றை மோடி  செய்திருக்கிறார். சுதந்திர தின விழா மேடையில் குடும்ப அரசியல் குறித்து பேசி இருக்கிறார். அது உண்மையிலேயே மற்றவர்களுக்காக சொன்னதா? அல்லது அமித்ஷாவின் மகன் குறித்து பேசினாரா? என்பது தெரியவில்லை. மோடிக்கும் அமித்ஷா விற்கும் உள்ள பனிப்போர் போல இந்த பேச்சு தெரிகிறது. ஆனால் மரபை மீறி பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் அரசியல் பேசியிருக்கிறார் என தெரிவித்தார்.

    தொடர்ந்து நிதி அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு தமிழிசை சௌந்தராஜன் பொன். ராதாகிருஷ்ணன் இல. கணேசன் உள்ளிட்டவர்கள் இருந்தபோது கூட இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது இல்லை. ஆனால் அண்ணாமலை  பொறுப்பேற்ற பின்பு தான் தமிழக பாஜக அரசியலில் இப்படி அநாகரிகமான செயல்கள் நடைபெறுகிறது எப்படி அண்ணாமலையை அரவக்குறிச்சி மக்கள் புறக்கணித்தார்களோ அதுபோல் அண்ணாமலை அரசியலையும் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிவித்தார்.

    ALSO READ |  சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் டாஸ்மாக்கில் ரூ.273.92 கோடிக்கு மது விற்பனை

    மேலும்  ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளாதது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அவருக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும் அல்லது வசூல் வேட்டைக்கு சென்று இருப்பார் எனக் கூறிய மாணிக் தாகூர் ஆளுநர் தேநீர் விருந்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு அதனால் தான் காங்கிரஸ் விசிக,மற்ற எதிர்க்கட்சிகள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மரபை மீறி புறக்கணிப்பது வேதனை தருவதாக உள்ளது என தெரிவித்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Amit Shah, PM Modi

    அடுத்த செய்தி