ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குளிர்காலத்தில் சரும வறட்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை பின்பற்றினால் போதும்!

குளிர்காலத்தில் சரும வறட்சியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை பின்பற்றினால் போதும்!

சருமம் குறைவான ஈரப்பதம் கொண்டிருத்தல் , குளிர்ந்த வெப்பநிலையில் எப்போதும் இருத்தல், சூடான நீரில் குளியல், கடுமையான சோப்புகள் மற்றும் லிக்விட்கள் போன்றவை எல்லாமே வெளிப்புறத்திலிருந்து சருமத்தின் வறட்சியை தூண்டி விடக்கூடும்

  • 2 minute read
  • Last Updated :

குளிர்காலத்தில் காய்ச்சல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம். அதேபோல சருமம் மிகவும் வறண்டு போகும் பருவமும் இதுவே. அவை அனைத்தையும் குணப்படுத்தும் இயற்கை உணவுப் பொருட்கள் நிறைய உள்ளன. அவற்றை குறித்து நாம் இந்த பதிவில் காண்போம்.

ஆரோக்கியமான உடலை பராமரிக்கும் போது உடலில் தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. எனவே, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை திறம்பட அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம். நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் கவனமாக இருப்பதன் மூலம் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். அதேபோல சரும வறட்சியையும் எளிதில் குணப்படுத்தலாம். நீங்கள் பின்பற்றவேண்டியதெல்லாம்,

* குளிர்காலத்தில் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள், பழுப்பு அரிசி மற்றும் பஜ்ரா ஆகியவற்றை உணவில் சேர்ப்பது மிக அவசியம்.

* அசைவம் சாப்பிடுபவர்கள், முட்டை, மீன் சாப்பிடுவது நல்லது. சோயாபீன்ஸ் சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

* ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களான கடல் மீன், பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை முக்கியமாக உட்கொள்ள வேண்டும். இந்த உணவுப் பொருட்கள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

* பிஸ்கட், கேக், பேஸ்ட்ரி, வறுத்த உணவுகள், சிவப்பு இறைச்சி, நெய் மற்றும் ஆட்டிறைச்சி போன்ற டிரான்ஸ் கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட உணவுப் பொருட்களைத் சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கெமிக்கல் டை இல்லாமல் நரை முடியை இயற்கையாகவே கருமை நிறத்தில் மாற்ற டிப்ஸ்..!

* இருப்பினும் கொழுப்பும் உடலுக்கு முக்கியமானது. உங்கள் உணவில் நெய், வேர்க்கடலை மற்றும் முட்டைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அதனை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது அவசியம்.

* உணவுப் பொருட்களை வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக வேகவைத்தோ அல்லது சுடவைத்தோ சாப்பிடலாம். அது நல்ல உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

* அதேபோல உணவில் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும்.

வறண்ட சருமம் தீவிரமாக இருக்கும் நிலைமை ஜெரோடெர்மாடிடிஸ் மற்றும் ஜெரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவான தோல் நிலை. சருமத்தின் மேல் அடுக்கு பகுதியில் போதுமான ஈரப்பதம் அல்லது எண்ணெய் இல்லாததால் இது உண்டாகிறது. இவை தீவிரமாக இருக்கும் போது உலர்ந்த திட்டுகள் மற்றும் சருமத்தில் சிறிய செதில்கள் இருக்கும். உலர்வான சருமம் வெளிப்புறக்காரணங்களோடு உடல் உள் உறுப்பு காரணங்களாலும் உண்டாகிறது.

சருமம் குறைவான ஈரப்பதம் கொண்டிருத்தல் , குளிர்ந்த வெப்பநிலையில் எப்போதும் இருத்தல், சூடான நீரில் குளியல், கடுமையான சோப்புகள் மற்றும் லிக்விட்கள் போன்றவை எல்லாமே வெளிப்புறத்திலிருந்து சருமத்தின் வறட்சியை தூண்டி விடக்கூடும். எனவே, இந்த குளிர்காலத்தில் மேற்கண்ட உணவு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

First published: