காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்தி கொலை - கோவையில் பயங்கரம்

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் தந்தைக்கும் இரு கைகளில் கத்தி குத்து விழுந்துள்ளது.

காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்தி கொலை - கோவையில் பயங்கரம்
  • Share this:
கோவை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யாவும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவீட்டாருக்கும் இது தெரியவர, இருவரையும் அழைத்து அவர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து கடந்த 3 மாதங்களாக ரதீஸிடம் ஐஸ்வர்யா பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று மாலை ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்ற ரதீஸ், தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.. இதற்கு மாணவி மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால், ஐஸ்வர்யாவை குத்தி விட்டு தப்பியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் தந்தைக்கும் இரு கைகளில் கத்தி குத்து விழுந்துள்ளது.படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா உயிரிழந்தார். இதனிடையே வழக்குப்பதிவு செய்த பேரூர் காவல்துறையினர் தப்பியோடிய ரதீஸை தேடி வருகின்றனர்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading