அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதி! நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

விடுமுறையில் ஊருக்கு சென்றாலும் கட்டாயம் முழு உணவு கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.

news18
Updated: July 2, 2019, 11:04 AM IST
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதி! நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
news18
Updated: July 2, 2019, 11:04 AM IST
கோவையில் உள்ள பெண்கள் தனியார் விடுதியில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி, நள்ளிரவில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

கோவை அவினாசி சாலையில் உள்ள YWCA பெண்கள் விடுதியில், ஏராளமான கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கியுள்ளனர்.

இங்கு கடந்த ஆண்டைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதற்கான முறையான ரசீது தராமல் முறைகேடு நடப்பதாகவும் குற்றம்சாட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மற்ற விடுதிகளை விட இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் அதற்கு தகுந்தது போல் உணவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் புகார் கூறினர்.

விடுமுறையில் ஊருக்கு சென்றாலும் கட்டாயம் முழு உணவு கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், முழக்கங்களை எழுப்பியவாறு இரவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also see...

First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...