கோவை சாலையில் கிடந்த பெண் சடலம்: சிசிடிவி காட்சி மூலம் திருவள்ளூர் விரைந்த காவல்துறை

மாதிரி படம்

கோவையில் சாலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் சிசிடிவியில் பதிவான காரைத் தேடி போலீசார் திருவள்ளூர் மாவட்டம் விரைந்துள்ளனர்.

 • Share this:
  கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் சோதனை சாவடி அருகே கடந்த திங்கட்கிழமை காலை சாலையில், சிதைவடைந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

  பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பீளமேடு போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் சடலம் கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர்.

  அதில், சம்பவத்தன்று காலை 5.45 மணி அளவில் கார் ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் விழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சடலம் கிடந்த இடத்திற்கு 100 மீட்டர் தொலைவுக்கு முன்பே அந்தப் பெண்ணின் ஆடைகள் கிடந்து உள்ளன.

  மேலும் அந்த சடலத்தின் மீது பல வாகனங்கள் ஏறிச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் ஏதேனும் காரில் அந்தப் பெண் சிக்கி இழுத்து வரப்பட்டிருக்கலாமோ என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  இதையடுத்து சிசிடிவியில் பதிவாகியுள்ள காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்தபோது, அந்தக் கார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.

  கார் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அன்று பெண்ணின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

  அதில், இறந்த பெண்ணுக்கு 65 வயது இருக்கலாம் எனவும், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதனால் இறந்த பெண் யார், அவரது இறப்பிற்கு காரணம் என்ன, காரில் இருந்து சடலம் தள்ளி விடப்பட்டதா என்பது குறித்து பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: