• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’இத்தனை ஆண்டுகளில் சீமானால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில்தான் வெற்றிபெற முடிந்தது’ - விஜய் ரசிகர்கள் கிண்டல்

’இத்தனை ஆண்டுகளில் சீமானால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில்தான் வெற்றிபெற முடிந்தது’ - விஜய் ரசிகர்கள் கிண்டல்

விஜய் | சீமான்

விஜய் | சீமான்

கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, விஜய் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

  • Share this:
    நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, நடிகர் விஜய்யையும் விமர்ச்சித்து இருந்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

    அவர் பேசுகையில், ”ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது. ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆர்-யைத் தூக்கிப் பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவிற்குத்தான் போய் சேரும். எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் நாங்கள் அவரை மதிக்கிறோம் மற்றபடி எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி கொடுத்தார். கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம்.ஜி.ஆர். முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்தது எம்.ஜி.ஆர்” ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

    Also read: ’எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்க’ - போப் வேண்டுகோள்

    இதற்காக சீமானை கண்டிக்கும் விதமாக கோவை நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களில், 10 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வரும் சீமானால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில்தான் வெற்றி பெற முடிந்ததாகவும், ஆனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: