• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வீட்டுக்கு விளையாட அழைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

வீட்டுக்கு விளையாட அழைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    கோவை அருகே ஐந்தாம் வகுப்பு படித்து வரும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரண்டு சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி கடந்த 26ம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இவ்விரு சிறுமிகளையும் அவர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சிறுமிகள் இருவரும் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 2 சிறுவர்களையும் வடவள்ளி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    9ம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: