வீட்டில் மின்சாரம் வசதி இல்லாமல் நீட் தேர்வுக்கு படித்து தேர்ச்சி பெற்ற பழங்குடி மாணவி

அதே பள்ளியில் படிக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த பிஸ்டிஸ் பிரிஸ்கா மாணவிக்கு பெரம்பலூர் தனலக்‌ஷ்மி சீனிவாசா கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது.

வீட்டில் மின்சாரம் வசதி இல்லாமல் நீட் தேர்வுக்கு படித்து தேர்ச்சி பெற்ற பழங்குடி மாணவி
மாணவிக‌ள் ரம்யா, பிஸ்டிஸ் பிரிஸ்கா
  • News18
  • Last Updated: November 21, 2020, 1:18 PM IST
  • Share this:
கோவையில் வீட்டில் மின்சாரம் வசதி இல்லாமல் நீட் தேர்வுக்கு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார் பழங்குடி மாணவி ரம்யா.

கோவை மாவட்ட வெள்ளியங்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்தவர் ரம்யா. பெற்றோர் ஆரம்பக் கல்வியை முடிக்காதவர்கள். அவரது தந்தை கூலி வேலைக்கு செல்கிறார். பின் தங்கிய பகுதியில் வசிக்கும் அவரது வீட்டில் மின்சார வசதி கிடையாது. நீட் தேர்வுக்கு தயார் செய்வது சிரமமாக தான் இருந்தது என தெரிவித்தார்.

அவருக்கு கோவை பி எஸ் ஜி கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மூன்று பழங்குடி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒருவர் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.


Also read... அரசியலில் வளர்ந்து வரும் இளைஞர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்அதே பள்ளியில் படிக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த பிஸ்டிஸ் பிரிஸ்கா மாணவிக்கு பெரம்பலூர் தனலக்‌ஷ்மி சீனிவாசா கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது.

இவர்கள் படிப்பதற்கு உறுதுணையாக அவரது பள்ளி தலைமையாசிரியர் பெல்லி மற்றும் ஆசிரியர் அருள் சிவா இருந்துள்ளார்.  மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்த இயலாது. எனவே பெற்றோர் ஆசிரியர் கழக சார்பாக அவர்களுக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்து வருகிறோம்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading