கோவை: இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் நகைபறிப்பு: இளைஞர்களை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்...

கோவை: இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் நகைபறிப்பு: இளைஞர்களை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்...
இளைஞர்களை கட்டி வைத்து அடித்த பொது மக்கள்
  • News18
  • Last Updated: September 22, 2020, 1:24 PM IST
  • Share this:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்  பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் நகைபறிக்க  முயன்ற இருவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொது மக்கள் அவர்களை காவல் துறையிடம்  ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா. இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகைக்கடையில் இன்று பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்த நிலையில், ஒருவர் மட்டும்  வாகனத்தில் இருந்து இறங்கி  பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை  பறித்து விட்டு தப்பி ஒட முயன்றுள்ளார்.


அப்போது அந்த பெண் இளைஞரை தள்ளி விட்டு சப்தம் எழுப்பவே, அருகில் இருந்த பொதுமக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில்  கட்டி வைத்து அடித்தனர். பின்னர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.Also read... Gold Rate | தங்கம் விலை சவரனுக்கு ₹280 குறைந்தது

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப், ரத்துல் என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading