மாட்டிறைச்சி குறித்த கருத்தால் கைதான நிர்மல் குமாருக்கு ஜாமீன் ரத்து!

Web Desk | news18
Updated: August 1, 2019, 9:15 AM IST
மாட்டிறைச்சி குறித்த கருத்தால் கைதான நிர்மல் குமாருக்கு ஜாமீன் ரத்து!
கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
Web Desk | news18
Updated: August 1, 2019, 9:15 AM IST
கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக  கருத்து தெரிவித்த நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், நிர்மல்குமாரை தனிமை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். மேலும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதிமுக அரசு அண்ணா கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.


முன்னதாக, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... யார் இந்த சித்தார்த்தா?


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...