”மாணவர்களின் மனிதக் கடவுளே!” - ஆல் பாஸ் அறிவிப்பைத் தொடர்ந்து முதலமைச்சருக்காக விதவிதமான போஸ்டர்களை ஒட்டும் மாணவர்கள்..

ஆல் பாஸ் அறிவிப்பைத் தொடர்ந்து முதலமைச்சருக்காக விதவிதமான போஸ்டர்களை ஒட்டி அசத்தும் மாணவர்கள்

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர்த்த மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவல் காரணமான கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர்த்த மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது.இதனை வரவேற்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக கோவையில் பல முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதில் தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் ”மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே” என்ற வரிகள் இடம் பெற்றிருப்பது காண்போரை அசர வைத்துள்ளது.
Published by:Rizwan
First published: