6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்

Web Desk | news18
Updated: August 23, 2019, 9:12 AM IST
6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்று உளவுத்துறை தகவல் - தீவிர சோதனையில் போலீசார்
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவல்
Web Desk | news18
Updated: August 23, 2019, 9:12 AM IST
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் சுமார் 6 பேர் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு அலர்ட் கொடுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு திடீரென மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பி களுக்கும் வாகன சோதனை மற்றும் சுங்கச்சாவடி சோதனையில்  ஈடுபடுமாறு டிஜிபி அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளார்.

கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயம், மசூதிகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உக்கடம் ,கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.First published: August 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...