ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சூலூர் அரசுப்பள்ளியில் கடவுள் படங்களுடன் வைக்கப்பட்ட நடிகர் சிவக்குமார் படம் - சர்ச்சையை தொடர்ந்து அகற்றம்

சூலூர் அரசுப்பள்ளியில் கடவுள் படங்களுடன் வைக்கப்பட்ட நடிகர் சிவக்குமார் படம் - சர்ச்சையை தொடர்ந்து அகற்றம்

 பள்ளியில் கடவுள் படங்களுடன் வைக்கப்பட்ட நடிகர் சிவக்குமார் படம்

பள்ளியில் கடவுள் படங்களுடன் வைக்கப்பட்ட நடிகர் சிவக்குமார் படம்

நடிகர் சிவகுமார், சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும் முன்னாள் மாணவர் சங்க தலைவராகவும்  இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் சிவகுமாரின் படம் கடவுள் படங்களுடன் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அந்த படம் தலைமை ஆசிரியர் அறையில் இருந்து அகற்றப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில்  தலைமை ஆசிரியர் அறையில் கடவுள் படங்களுடன் நடிகர் சிவக்குமாரின் படமும் வைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பான வாட்ஸ் அப் காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளி தலைமையாசிரியர் குமார், பள்ளி திறப்பதற்கு  வசதியாக வகுப்பறைகள் , அலுவலகம் போன்றவை சுத்தம் செய்யப்பட்டு  சுண்ணாம்பு அடிக்கும்  பணி நடைபெற்று வருவதாகவும், பணியில் ஈடுபட்டவர்கள்  தவறுதலாக நடிகர் சிவகுமாரின் படத்தையும்  சேர்த்து மாட்டி விட்டதாகவும், உடனடியாக அது  சரி செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.

Also read... அபராதம்.. தகுந்த நடவடிக்கை.. உரியமுறையில் செயல்படாத அதிகாரிகள் மீதான பள்ளிக்கல்வித்துறை உத்தரவு என்ன?

மேலும் அது நடிகர் சிவக்குமாரின் புகைபடம் அல்ல எனவும், மாணவர் ஒருவர் வரைந்த ஓவியம் எனவும் தலைமையாசிரியர்  குமார் தெரிவித்தார். நடிகர் சிவகுமார், சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும் முன்னாள் மாணவர் சங்க தலைவராகவும்  இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Sivakumar, Coimbatore