கடன் கொடுக்க மறுப்பு... துப்பாக்கி, கத்தியுடன் வங்கியில் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல்...! கோவையில் பரபரப்பு

கடன் கொடுக்க மறுப்பு... துப்பாக்கி, கத்தியுடன் வங்கியில் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல்...! கோவையில் பரபரப்பு
News18
  • News18
  • Last Updated: December 4, 2019, 11:27 AM IST
  • Share this:
கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் நேற்று துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் கனரா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் லோன் பெற்று தருவதாகக் கூறி இடைத்தரகர் குணாளன் என்பவர், 3 லட்சம் ரூபாய் வெற்றிவேலன் என்பவரிடம் வாங்கியுள்ளார்.

ஆனால், காலம் தாழ்த்தப்பட்டதால் பணம் கொடுத்தவர் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த நிலையில், வங்கியில்  இடைதரகருடன் குணாளன், தலைமை மேலாளர் சந்திரசேகர் பேசிக்கொண்டு இருந்த போது அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பணம் கொடுத்த வெற்றிவேலன் அவரை தாக்க தொடங்கினார்.
தடுக்கச் சென்ற வங்கி தலைமை மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் மீது சிறிய கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

கனரா வங்கி முதன்மை மேலாளர் சந்திரசேகர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், புகாரின் பேரில் வெற்றிவேலனை காவல் துறையினர் கைது செய்து கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இடைத்தரகர் குணாளனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading