கோவையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு

கோவையில்  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள்  கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.  குறிப்பாக ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது.

கோவையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 17, 2020, 1:02 PM IST
  • Share this:
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமான கோவையில் குழந்தைகளுக்கு  எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன. கோவை மாநகரில் மட்டும் ஐனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 52 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  இருந்த மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 26 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு ஐனவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாக 40 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது கடந்த ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளை காட்டிலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 3 மாதங்கள் இருக்கும்  நிலையில் கோவை மாநகரில் பதிவாகும் போக்சோ  வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்பு  இருக்கின்றது.

உண்மையில் பெண் குழந்தைகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் காவல் நிலையங்களில் வழக்குகளாக பதிவாகி இருப்பதை விட அதிகம் இருக்கும் எனவும், பல்வேறு தடைகளை கடந்துதான் இவ்வளவு வழக்குகள் பதிவாகி இருப்பதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா தெரிவித்தார். மேலும் பொது முடக்க காலத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து இருப்பதற்கு காவல்நிலையங்களில் பதிவாகியுள்ள போக்சோ  வழக்குகள் உதாரணம் எனவும் ராதிகா தெரிவித்தார்.


காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாவதற்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம் என வழக்கறிஞர் சர்மிளா தெரிவித்தார். முதலில் புகார் கொடுக்க பயப்படும் நிலை இருந்ததாகவும் ஆனால் இப்போது, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியல் தெரியாது என்பதை உணர்ந்துள்ளதால்  தைரியமாக புகார் அளிக்கின்றனர் என தெரிவித்த அவர், புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் இதுபோன்று புகார்கள் கொடுப்பது குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். தவறான தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை கிராம பகுதிகளில் அதிகரிக்கும் வேண்டும் எனவும் கடுமையான தண்டணை கிடைக்கும் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் போக்சோ  வழக்குகள் பதிவாவதை  தடுக்க முடியும் எனவும் வழகறிஞர் ஷர்மிளா தெரிவித்தார்.Also read... கொரோனா வைரஸ் பற்றிய கண்ணோட்டம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் வேறுபடுகின்றன: ஆய்வில் கண்டுபிடிப்பு

குழந்தைகளிடையே தொடர்ந்து தொடுதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக புகார் கொடுக்க பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில்  தண்டணைகள் கடுமையாக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 3 ம் தேதி பாலியல் துன்புறுத்தல்களில் சிக்கும் குழந்தைகளுக்கான நிவாரண நிதியை தமிழக அரசு உயர்த்தியது. நிவாரண உதவிகளை உயர்த்துவது ஒருபுறம் இருந்தாலும், பெண் குழந்தைகள் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியள்ளனர்.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading