கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் இன்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

news18
Updated: August 10, 2019, 6:58 AM IST
கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
நீலகிரியில் மழை
news18
Updated: August 10, 2019, 6:58 AM IST
நீலகிரி மாவட்டத்தில் மழை, வெள்ள இடர்பாடுகளில் சிக்கி நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். கோவை, நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் 5 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. உதகை-கூடலூர் சாலையில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்தன.


அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் அவற்றை ஜேசிபி உதவியுடன் அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் வீடு இடிந்து விழுந்ததில் அமுதா அவரது 8 வயது மகள் பாவானா ஆகியோர் உயிரிழந்தனர். குத்துக்குளியில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழிந்தனர். நேற்று ஒரே நாளில் மழை, வெள்ள இடபாடுகளில் 5 பேர் உயிரிழந்தனர்.

Loading...

உதகை படகு இல்லம் பகுதியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் காலனி அருகே ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பொறியியல் பணிக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில், உதகை மண்டலத்தில் மட்டும் இந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் பிற்பகலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டியது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலை, ஒண்டிபுதூர், பட்டணம் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரை பாலங்கள் தெரியாதபடி தண்ணீர் கரைபுரண்டோடுவதால் மக்கள் ஆவமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

சூலூர் அருகே உள்ள ராவுத்தார் பிரிவில் நொய்யல் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செல்வபுரம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குனியமுத்தூர் அணைக்கட்டு பகுதியில் மழையால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை ஆட்சியர் ராசாமணி நேரில் ஆய்வு செய்தார். கோவை மாவட்டத்திலும், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை எதிரொலியால் நம்பியாறு, பச்சையாறு மற்றும் நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. நம்பியாற்றுக் கால்வாய் மூலம் ராஜக்காமங்கலம் குளத்திற்கு தண்ணீர் வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் இன்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Also see...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...