Home /News /tamil-nadu /

"எனக்கு இன்னும் அரசு பணம் தரவில்லை" - வீரப்பனை சுட்டுக்கொல்ல உதவிய பெண் புகார்

"எனக்கு இன்னும் அரசு பணம் தரவில்லை" - வீரப்பனை சுட்டுக்கொல்ல உதவிய பெண் புகார்

சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த தகவல்களை காவல்துறைக்கு தெரிவித்த கோவையை சேர்ந்த சண்முகப்பிரியா, தமக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழக - கர்நாடகா வனப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகி, வீரப்பன் குறித்த தகவல்களை கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா சேகரித்து, அதிரடிப்படைக்கு தெரிவித்து வந்தார்.

    சண்முக பிரியா அளித்த தகவல்கள் அடிப்படையில் வீரப்பனை அதிரடிப்படை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனைத் தொடர்ந்து வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் சண்முகபிரியாவுக்கு அப்போதைய மத்திய அரசு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தது.

    இதேபோல், மாநில அரசும் ஊக்கத் தொகையுடன் வீட்டுமனையும் வழங்குவதாக பரிசுத்தொகையை அறிவித்தது. ஆனால், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை என சண்முகபிரியா புகார் கூறியுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Coimbatore, Prize announcement, Sandalwood veerappan, Sanmugapriya, Veerappan case

    அடுத்த செய்தி