கொரோனாவால் முடங்கிய பொதுப் போக்குவரத்து - சூடுபிடிக்கும் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை

கொரோனாவால் பொதுப் போக்குவரத்து முடங்கிய நிலையில், பழைய இருசக்கர வாகன விற்பனை சூடுபிடித்துள்ளது.

கொரோனாவால் முடங்கிய பொதுப் போக்குவரத்து - சூடுபிடிக்கும் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை
மாதிரி படம்
  • Share this:
கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகள் படிப்படியாக அமலாகி வருகிறது. ஆனால் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு, எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பதே பெருவாரியான மக்களின் கேள்வியாக உள்ளது.

சொந்த கார், இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல் இல்லை என்ற நிலையில், பொதுப் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் பட்ஜெட்டிற்குள் பழைய இருசக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாவதாக கூறுகிறார்கள் கோவையைச் சேர்ந்த வியாபாரிகள். குறிப்பாக ஸ்கூட்டி உள்ளிட்ட பெண்களுக்கான வாகனங்களே பலரது விருப்பமாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


Also see... புடவையில் வெரைட்டி லுக்ஸ்... பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மாவின் அசத்தல் ஆல்பம்!

தினமும் வாடகைக் காரில் செல்வது அதிக பொருட்செலவை ஏற்படுத்தியதால், பணிக்கு செல்வதற்காகவே பழைய இருசக்கர வாகனம் வாங்கியதாக மோகனப்பிரியா என்பவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே பழைய இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தற்போது புதிய வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். அதனால், பழைய இருசக்கர வாகன சந்தையில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading