ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழ இருந்த பயணியை காப்பாற்றிய போலீஸ் - குவியும் பாராட்டுகள்!

ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழ இருந்த பயணியை காப்பாற்றிய போலீஸ் - குவியும் பாராட்டுகள்!
சிசிடிவியில் பதிவான காட்சி
  • News18
  • Last Updated: October 27, 2019, 2:01 PM IST
  • Share this:
சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ஜெயனுக்கு, அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் ஏராளமானோர் ரயில் நிலையத்தில் குவிந்ததால், கோவை, வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை மாலை முதல் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு பயணிகள் ரயில் இன்று காலை கிளம்பியது. அப்போது ஒடும் ரயிலில் பயணி ஒருவர் ஓடி வந்து ஏறினார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டது.


அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் ஜெயன் என்பவர் சமயோசிதமாக செயல்பட்டு கீழே தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றி ரயிலில் அனுப்பி வைத்தார். நடைமேடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் தீயாய் பரவியது.

வீடியோவைப் பார்த்த மக்கள் பலரும் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், ரயில்வே அதிகாரிகளும் , ரயில்வே காவல் துறையினரும் பாராட்டு ஜெயனைப் பாராட்டியுள்ளனர்.

 

Loading... வீடியோ பார்க்க்: 3 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த விவகாரம் திடுக்கிடும் திருப்பம்

First published: October 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...