விமானப்படை அணிகளுக்கு 'பிரசிடென்ட் கலர்ஸ் பிரசன்டேசன்' விருது!

விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

விமானப்படை அணிகளுக்கு 'பிரசிடென்ட் கலர்ஸ் பிரசன்டேசன்' விருது!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • News18
  • Last Updated: March 4, 2019, 1:20 PM IST
  • Share this:
சூலூர் விமானப் படைத்தளம் மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹக்கிம்பேட் விமான படைத்தளம் ஆகியவற்றில் இயங்கி வரும் 5 பேஸ் ரிப்பேர் டிப்போவை சேர்ந்த படை அணிகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் "பிரசிடென்ட் கலர்ஸ் பிரசன்டேசன்" விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் பிரசிடென்ட் கலர்ஸ் பிரசன்டேசன் விருது வழங்கும் விழா துவங்கியது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் mi 17, டோர்னியர், சாரங்க், தேஜஸ், ஏ.என் 32, அவுரவ் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


சூலூர் விமானப் படைத்தளம் மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹக்கிம்பேட் விமான படைத்தளம் ஆகியவற்றில் இயங்கி வரும் 5 பேஸ் ரிப்பேர் டிப்போவை சேர்ந்த படை அணிகளுக்கு  விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார்.

விழாவில், விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். விமான படை நிகழ்ச்சியில் ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டார்.

பின்னர் விமானப் படை வீரர்கள் மத்தியில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,  “இந்த இரு அணிகளுக்கும் விருதுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Loading...

விமானப் படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது. 1975 போரில் ஹக்கிம்பெட் படைப்பிரிவு சிறப்பாக செயல்பட்டது.

சமீபத்தில் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானபடை வீரமாகவும், சிறப்பாக செயல்பட்டது. பேரிடர் கால சமயங்களில் விமானப்படையின் பணி மகத்தானது என பாராட்டு

இந்திய விமானப் படை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது எனவும், 5 பேஸ் ரிப்பேர் டிப்போ தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது" என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்

Also Watch: யார் மானங்கெட்ட கூட்டணி? தினகரன் – ராஜேந்திர பாலாஜி மோதல்

First published: March 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...