Home /News /tamil-nadu /

சாப்பிடும் போது தொண்டையில் சிக்கிய உணவு.. காவலரின் உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ

சாப்பிடும் போது தொண்டையில் சிக்கிய உணவு.. காவலரின் உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ

கோவை போலீஸ்

கோவை போலீஸ்

Coimbatore : காவலர் சாப்பிடும்போது உணவு தொண்டையில் சிக்கி திணறிய நிலையில் போலீஸ் எஸ்.ஐ துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

    மேட்டுப்பாளையம்  பணியில் இருந்த காவலர் ஒருவருக்கு உணவு உண்ணும் போது தொண்டையில்  உணவு குழாய் அடைத்து உயிருக்கு போராடிய நிலையில் துரிதமாக செயல்பட்டு காவல் உதவி ஆய்வாளர்   அவரை காப்பாற்றினார்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 21ஆம் தேதி அ.தி.மு.க கவுன்சிலர்கள் மன்ற கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக போலீசார் நகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பணியில் இருந்த போலீசாருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. காவலர் அபுதாஹீர் என்பவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென உணவுக் குழாயில் உணவு சிக்கி அடைப்பு ஏற்பட்டது.

    அதிர்ச்சி அடைந்த காவலர் என்ன செய்வது என்று தெரியாமல் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர்  தாமோதரன் அவர்களிடம் ஓடி சென்று காப்பாற்று மாறு செய்கை காட்டியுள்ளார்.
    உடனடியாக சுதாரித்துக்கொண்ட உதவி ஆய்வாளர் தாமோதரன் அவரை தூக்கி குலுக்கி முதலுதவி செய்து அவரின் உயிரைக் காப்பாற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தச் சம்பவம்  மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சியை வெளியிட்ட நகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் தாமோதரன் அவர்களை பாராட்டியுள்ளனர். அது குறித்து வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி நிலையில்  காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

    செய்தியாளர்: யோகேஷ்வரன் (மேட்டுப்பாளையம்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV, Coimbatore, Police, Tamil News

    அடுத்த செய்தி