கோவையில் 17 பேர் உயிரிழந்த விவகாரம்! போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை

கோவையில் 17 பேர் உயிரிழந்த விவகாரம்! போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை
போராட்டம்
  • News18
  • Last Updated: December 2, 2019, 6:30 PM IST
  • Share this:
கோயம்புத்தூர் மாவட்டம் நடூரில் சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் அதன் உரிமையாளரைக் கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டனர். அதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மழையால், மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்தநிலையில், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில், இன்று அதிகாலை 4 வீடுகள் இடிந்துவிழுந்துள்ளன. இந்த விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானதாகச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

வீடுகளின் அருகில் உயரமாகக் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர்தான் இந்த வீடுகளின் மேல் விழுந்துள்ளது. அதன் உரிமையாளரைக் கைது செய்யவேண்டும். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தனர். அதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Also see:

Loading...


First published: December 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...