பெரியார் சிலையை உடைப்பேன் எனக்கூறியதை தட்டிக்கேட்டவருக்கு கொலைமிரட்டல்.. பாரத் முன்னணி நிர்வாகி கைது.. நடந்தது என்ன?

மனோகரன்

செட்டிபாளையம் காவல்துறையில் பிரபு புகார் அளிக்கவே, கொலை மிரட்டல்  வழக்குப் பதிவு செய்த போலீசார் பாரத் முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவையில் பெரியார் சிலையை உடைப்பேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாரத் முன்னணி என்ற அமைப்பின் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கல்ல பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்.இவர் பாரத் முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றார். இவர் வாட்ஸ் அப் குழு ஒன்றில் தந்தை பெரியார் சிலையை உடைப்பேன்  என பதிவிட்டு இருந்தார்.

அதே பகுதியை சேர்ந்த பிரபு என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர், இது தொடர்பாக  மனோகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் பிரபுவுக்கு, பாரத் முன்னணி அமைப்பின் நிர்வாகி மனோகரன்  கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.Also read... உயிருக்கு ஆபத்தான நிலையில் 80 அடி உயரத்தில் பணி செய்யும் மின்வாரிய ஊழியர் - வீடியோ

இது குறித்து செட்டிபாளையம் காவல்துறையில் பிரபு புகார் அளிக்கவே, கொலை மிரட்டல்  வழக்குப் பதிவு செய்த போலீசார் பாரத் முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published: