ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிறையில் உள்ள கிஷோர் கே சுவாமி மீண்டும் கைது.!

சிறையில் உள்ள கிஷோர் கே சுவாமி மீண்டும் கைது.!

கிஷோர் கே சுவாமி

கிஷோர் கே சுவாமி

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சுவாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

சென்னை காவல்துறையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட யூட்யூபர் கிஷோர் கே சுவாமி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்திருந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 23ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சுவாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

கடந்த வாரம் சென்னையில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமியை கோவை 4 வது குற்றவியில் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பாக காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.

கோவை வழக்கில் வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். இதனையடுத்து கிஷோர் கே சாமி தரப்பில் ஜாமீன் கேட்டு 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

இதனிடையே கிஷோர் கே சாமியை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் போலீசார் 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல். மனுவை விசாரித்த நீதிபதி 2 மணி நேரம் மட்டும் கிஷோர் கே சாமியிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.

First published:

Tags: Chennai Police, Cyber crime