Home /News /tamil-nadu /

காதல் ஜோடிகள் பதுங்கிய வீட்டில் கள்ளநோட்டு... சிக்கிய நண்பர்கள்

காதல் ஜோடிகள் பதுங்கிய வீட்டில் கள்ளநோட்டு... சிக்கிய நண்பர்கள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

காதலர்களுக்கு  உதவ போய் கள்ளநோட்டு விவகாரத்தில் இளைஞர்கள் இருவர் சிக்கிகொண்டது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
கோவையில் 7.5 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட  விவகாரத்தில் அந்த வீட்டில் தங்கி இருந்த இரு இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவை சேரன்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து  புதுக்கோட்டை காவல்துறையினர், பீளமேடு காவல் துறை உதவியுடன் சேரன்மாநகர்  பகுதியில் இருந்த வீட்டிற்கு நேற்று சென்றனர்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டை சோதனை செய்து  பார்த்த போது ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 4 கட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கைபற்றி போலீசார் அதை எண்ணி பார்க்கும் போது 7.5 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. பணத்தை கைப்பற்றிய போலீசார், சேரன் மாநகர் வீட்டில் தங்கியிருந்த புதுகோட்டை காதல் ஜோடி மற்றும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் குறித்தும் விசாரித்து வந்தனர்.

Also read... முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது- முதல் கணவரையும் சிறையில் அடைத்தது போலீஸ்



பீளமேடு போலிசார் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டுகள் பிடிப்பட்ட அறையில் தங்கியிருந்த இரண்டு பேர் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய பீளமேடு  போலீசார்  நாமக்கல்  பகுதியை  சேர்ந்த தீப்சித்(24) என்பவரையும், ராகவேந்திரன்  என்பவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தீப்சித்வீட்டிலே வெப் டிசைனிங் சென்டர் நடத்தி வந்ததாகவும், அதில் புதுக்கோட்டை சேர்ந்த ராகவேந்திரன்(21) பணி செய்து வந்துள்ளதும்  தெரியவந்தது. மேலும்  கொரோனா ஊரடங்கு என்பதால் வருமானம் இல்லமால் தவித்து வந்தாகவும், வருமானத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதால் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து போலியாக தயாரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ராகவேந்திரனின் நண்பர் ஊரில் இருந்து திருமணம் செய்து கொண்டு கோவை வந்தநிலையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். காதல் ஜோடிக்கு உதவி செய்த நிலையில்  போலி ரூபாய் நோட்டுகள் தயாரித்த விவகாரத்தில் இளைஞர்கள் இருவரும்  சிக்கிகொண்டதும்  போலீஸ் விசாரணையில்  தெரியவந்துள்ளது. இதனைடுத்து தீப்சித், ராபவேந்திரன்  ஆகிய  இருவரையும் பீளமேடு போலிசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதனிடையே புதுக்கோட்டையில் இருந்து கோவை வந்த காதல் ஜோடி தங்கி இருந்த இடத்தை கண்டறிந்த போலீசார் அவர்களை புதுக்கோட்டை மாவட்ட போலீசாருடன்  அனுப்பி வைத்தனர். காதலர்களுக்கு  உதவ போய் கள்ளநோட்டு விவகாரத்தில் இளைஞர்கள் இருவர் சிக்கிகொண்டது குறிப்பிடதக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Coimbatore, Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி