திருமணத்திற்கு மறுத்த மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்...!

திருமணத்திற்கு மறுத்த மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்...!
கைதான இளைஞர்
  • News18
  • Last Updated: December 2, 2019, 11:03 AM IST
  • Share this:
கோவையில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறி கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொடைக்கானலை சேர்ந்த அஜித்குமார் என்பவர், திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அண்மையில், தனது பள்ளியில் படித்த மாணவியை பார்த்து, அவரிடம் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.

அந்த பெண் கோவையில் கல்லூரியில் பயின்றுகொண்டே, சூலூரில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசியதுடன், காதல் வயப்பட்டுள்ளனர்.


ஒரு கட்டத்தில் மாணவி, தனது அந்தரங்க படங்களை, அவருடன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அஜித்குமாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே மாணவி பேசுவதை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஜித்குமார் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், அவரின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததன் பேரில், சூலூர் போலீசார் இளைஞரை கைது செய்தனர். அவர்மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Also see...
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading