திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை? OYO விடுதிக்கு சீல்!

OYO விடுதி முறையான அனுமதியில்லை என சீல் வைக்கப்பட்டாலும், கலாச்சார காவலர்களாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Web Desk | news18
Updated: June 26, 2019, 10:49 PM IST
திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை? OYO விடுதிக்கு சீல்!
OYO விடுதி முறையான அனுமதியில்லை என சீல் வைக்கப்பட்டாலும், கலாச்சார காவலர்களாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Web Desk | news18
Updated: June 26, 2019, 10:49 PM IST
கோவையில் திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை தருவதாக விளம்பரப்படுத்திய OYO விடுதிக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.

பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குவதற்கு உதவியாக விளங்கி வருவது விடுதிகள்.

ஆன்லைன் மூலமாக விடுதிகள் முன்பதிவு செய்வது அதிகரித்துவிட்ட நிலையில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளும் தற்போது விடுதிகளாக மாறியுள்ளன.

இந்நிலையில், கோவை நவ இந்தியா பகுதியில் OYO நிறுவனம் சார்பில் சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் வாடகைக்கு விடப்படுகின்றன.

இந்த சர்வீஸ் அபார்ட்மென்களில் திருமணமாகாத ஆண்களும் பெண்களும் தங்கினால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாதர் சங்கம், மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் புகார் அளித்தது. ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், OYO நிறுவனத்தின் கலாசார சீரழிவு நடவடிக்கையால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. உடனடியாக OYO நிறுவனத்தின் சர்வீஸ் அபார்ட்மென்ட்க்கு சீல் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மாதர் சங்கத்தின் புகாரையடுத்து ஆய்வு மேற்கொள்ள வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார். இதையடுத்து புகாருக்கு உள்ளான OYO நிறுவனத்தால் நடத்தப்படும் விடுதியில் ஆய்வு நடத்தினர். அந்த விடுதி முறையான அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த விடுதிக்கு சீல் வைத்தனர்.
Loading...
18 வயது நிரம்பிய, போதுமான ஆவணங்கள் உள்ள ஆணும் பெண்ணும் விடுதிகளில் தங்குவது தவறில்லை எனவும்,  மாதர் சங்கத்தின் அழுத்தத்தால் கலாச்சார காவலர்களாக மாறி மாவட்ட நிர்வாகம் விடுதிக்கு சீல் வைத்துள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்துளளனர்.

மேலும் கோவை நகரில் முறையான அனுமதி இன்றி செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also watch: சிறுவனை கடத்துவது போல் நாடகமாடி எடுக்கப்பட்ட வீடியோ! வலுக்கும் கண்டன குரல்கள்

First published: June 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...