தசை நார் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 மாத குழந்தை: மருத்துவ சிகிச்சைக்கு ரூ.16 கோடி- முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதவிகோரும் பெற்றோர்

கோயம்புத்தூர் குழந்தை

கோயம்புத்தூரில் 6 மாத குழந்தையின் சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றோர் உதவிகோரியுள்ளனர்.

  • Share this:
கோவையில் எஸ்.எம்.ஏ எனப்படும் தசை நார் சிதைவு  பிரச்சினையில் இருக்கும் 6 மாத குழந்தைக்கு ஒரு ஊசி செலுத்த 16 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் தமிழக முதல்வர் குழந்தையின் உயிரை காக்க உதவி செய்ய வேண்டும் என கேட்டு பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ்குமார் - ரோமிலா தம்பதி. இவர்களுக்கு ஜேசன் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. 6 மாத குழந்தையான ஜேசனுக்கு கால்கள் செயல் இழந்து காணப்பட்டதால், பெற்றோர்கள் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார்  மருத்துக்கு சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்து பார்த்த போது அந்த குழந்தைக்கு எஸ்.எம்.ஏ எனப்படும் தசை நார் சிதைவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்தக் குறைபாட்டைப் போக்க ரூ 16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என்று அந்த மருத்துவமனையில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் நேரில் சந்தித்து தமிழக முதல்வர்  உதவி செய்ய வேண்டும் என கேட்டு மனு அளித்தனர். மேலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் உதவி கேட்டு மனு அனுப்பினர்.

இதுதொடர்பாக பேசிய குழந்தையின் தாய் ரோமிலா 6 மாதமே ஆன எங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு நிலை வந்துள்ளது எனவும், எங்கள் குழந்தையைக் காப்பாற்ற 16 கோடி ரூபாய் ஊசி போட வேண்டிய நிலை இருப்பதாகவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த எங்களின் குழந்தையைக் காப்பாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தையின் 2 வயதிற்குள் அந்த ஊசியை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், எலக்ட்ரீசியனாக பணிபுரியும் தினேஷ் குமார், இவ்வளவு பெரிய தொகையை திரட்டி குழந்தையை எப்படி குழந்தையை காப்பாற்றுவது என தெரியாமல் தன்னார்வ அமைப்பு மற்றும் அரசின் உதவிகளை எதிர் நோக்கியுள்ளார்.
Published by:Karthick S
First published: