கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பூசணி அல்வா தயாரிப்பு மும்முரம்

பக்ரீத் பண்டிகைக்கு ஒரு சில தினங்களே  இருக்கும் நிலையில்  கோவையில்  பூசணி அல்வா தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பூசணி அல்வா தயாரிப்பு மும்முரம்
பக்ரீத் பண்டிகைக்கு ஒரு சில தினங்களே  இருக்கும் நிலையில்  கோவையில்  பூசணி அல்வா தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
  • Share this:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளாக ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகள் இருக்கின்றன. கொரோனா  தொற்று காரணமாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரம்ஜான்  பண்டிகை மிக எளிமையாக இஸ்லாமியர்களால்  கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கின்றது. பக்ரீத் பண்டியன்று அனைத்து இஸ்லாமியர்களும் ஆடு, மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அனைவர் இல்லத்திலும் பிரியாணி செய்து உற்றார், உறவினர்களுக்கு வழங்குவது வழக்கம்.
அப்போது அந்த பிரியாணியுடன்  பூசணி அல்வாவும் சேர்த்து வழங்குவது வழக்கம். பக்ரீத் பண்டிகைக்கு  இன்னும் ஒரு சில தினங்களே  இருக்கும் நிலையில் கோவையில் பூசணி அல்வா தயாரிக்கும் பணிகளானது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த முறை குர்பானி கொடுப்பது மிக குறைவாக இருக்கும் என்ற நிலையில் பூசணி அல்வா விற்பனை கொஞ்சம்  அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும்  பூசணி அல்வா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் கொரோனா  காரணமாக மிக்குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு பூசணி அல்வா தயாரிக்கப்படுவதாகவும் அல்வா தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் வழக்கமாக கிடைக்கும் பிரியாணி, பூசணி அல்வா போன்ற  ஆர்டர்கள் இந்த முறை  கிடைக்க வில்லை என கேட்டரிங் நிறுவனத்தினரும் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக 6 அல்லது 7 டன் வரை பூசணி வாங்கி அல்வா தயாரிப்பதாகவும், இந்த முறை பொருட்கள், ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றை கருத்தில் கொண்டு குறைந்த அளவு  பூசணி அல்வாவை தயாரித்து வருவதாகவும் கேட்டரிங் தயாரிப்பாளர் சித்திக் தெரிவித்தார்.

வழக்கமான அளவு இல்லாவிட்டாலும் இந்த முறை பூசணி அல்வா விற்பனை ஒரளவு கைகொடுக்கும்  என தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்காக பிரமாண்ட அண்டாக்களில்  தயாராகும் பூசணி அல்வா தனி தனி டப்பாக்களில்  பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க...சூதாட்டத்தால் தற்கொலை - பெற்றோருக்கும், காதலிக்கும் உருக்கமான கோரிக்கை வைத்த கல்லூரி மாணவன்

உற்றார் உறவினர்களுக்கு பிரியாணி வழங்க முடியாவிட்டாலும் பூசணி அல்வாவை மட்டுமாவது  கொடுத்து பண்டிகையை  எளிமையாக கொண்டாட இஸ்லாமியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading