பிரசவத்தின் போது தாய் இறந்ததால் குழந்தை ₹7500 விற்பனை... கோவையில் அதிர்ச்சி!

அருள்செல்வியின் அக்கா கணவரான ஆனந்தராஜ், பிறந்த குழந்தையை, ராஜன் - செல்வி என்ற தம்பதிக்கு, 7500 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.  

பிரசவத்தின் போது தாய் இறந்ததால் குழந்தை ₹7500 விற்பனை... கோவையில் அதிர்ச்சி!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 13, 2019, 4:50 PM IST
  • Share this:
கோவை மாவட்டம் சூலூரில், பிறந்த ஆண் குழந்தை 7500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான அருள்செல்விக்கு, திருமணம் ஆகாத நிலையில், கடந்த ஆறாம் தேதி அன்று ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்தின் போது எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்துவிட்டார்இதனைத் தொடர்ந்து, அருள்செல்வியின் அக்கா கணவரான ஆனந்தராஜ், பிறந்த குழந்தையை, ராஜன் - செல்வி என்ற தம்பதிக்கு, 7500 ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.  


இதனையடுத்து ராஜன் - செல்வி தம்பதி, அந்தக் குழந்தையை, அவினாசிப்பாளையத்தைச் சேர்ந்த மணிமேகலை என்ற உறவினரிடம் வளர்க்க கொடுத்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள், குழந்தையை மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அருள்செல்வியின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாததால் தான் குழந்தையை விற்றதாக ஆனந்தராஜ் வாக்குமுலம் அளித்துள்ளார்.காவல்துறை விசாரணையில் அருள்செல்வி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குழந்தையின் தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also see...

First published: September 13, 2019, 4:50 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading