புதிய கல்விக்கொள்கை இந்திய மொழிகளை மேம்படுத்தும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

புதிய கல்விக் கொள்கை இந்திய மொழிகளை மேம்படுத்தும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை இந்திய மொழிகளை மேம்படுத்தும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
பிரதமர் நரேந்திர மோடி.
  • Share this:
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில்கொண்டே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது இந்திய மொழிகளை மேம்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புத்தாக்க மென்பொருளை உருவாக்கும் மாணவர்களுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியை மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 4-வது ஆண்டாக நடைபெற்ற போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். தமிழகத்தில் கோவையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், மாணவர்களின் கேள்விகளுக்கு வணக்கம் என்று தமிழில் கூறி பதிலளித்தார்.


"ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020" நிகழ்வில் கோவை கல்லூரி மாணவி ஸ்வேதாவுடன், பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது தனது குழுவின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் குறித்து ஸ்வேதா விளக்கமளித்தார். வெள்ளப்பெருக்கின் போது நீர்நிலைகளின் கரைகள் உடைந்து சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலான அந்த மென்பொருள் குறித்து கேட்டறிந்த பிரதமர் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் எனப் பாராட்டினார்.

Also read: லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டது BCACBM சரக்கு ரயில் போக்குவரத்து சேவைஇதனைத் தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளித்த மோடி, நமது நாட்டில் உள்ள 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டே தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.21ம் நூற்றாண்டு என்பது அறிவுப்புலமைக்கான காலம் என்றும், கற்றல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனையே புதிய கல்விக் கொள்கை செய்திருப்பதாகவும், இந்தியாவில் கல்வியின் தரத்தில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

புத்தகப்பை என்ற சுமையிலிருந்து மாற்றி வாழ்க்கைக்கு உதவும் வகையிலான கற்றலை ஏற்படுத்தும் உணர்விலேயே கல்விக் கொள்கை இருப்பதாக அவர் கூறினார். உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள், தங்களது வளாகங்களை இந்தியாவில் அமைக்க தேசிய கல்விக் கொள்கை அனுமதிப்பதாகவும், இது சர்வதேச மையமாக இந்தியாவை உருவாக்க உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவர்களாக மாணவர்களை உருவாக்கும் கொள்கை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading