நீட் தேர்வு முடிவுகள்: ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடி என கோவை மாணவர் புகார்
நீட் தேர்வு முடிவுகள்: ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடி என கோவை மாணவர் மனோஜ் புகார் தெரிவித்துள்ளார்.

மாணவர் மனோஜ்
- News18 Tamil
- Last Updated: October 17, 2020, 8:07 PM IST
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஓ.எம்.ஆர் சீட்டில் வந்த மதிப்பெண்களுக்கும், நேற்று வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், ஓ.எம்.ஆர். சீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் தேர்வு எழுதிய மாணவர் மனோஜ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று நாடு முழுவதும் வெளியிடப்பட்டன. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில், NTA இணையப் பக்கத்திலிருந்து அந்த முடிவுகள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் மனோஜ் என்பவர் பீளமேடு நேசனல் மாடல் பள்ளியில் மாணவர் மனோஜ் 12ம் வகுப்பு முடித்தார். இவர் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு எழுதினார். அக்டோபர் 11ம் தேதி ஒ.எம்.ஆர் சீட்டில் வெளியான முடிவுகளைப் பார்த்துள்ளார். அதில் 594 மதிப்பெண்கள என காட்டியது. பின்னர் கடந்த 15ம் தேதி மீண்டும் ஒருமுறை மாணவர் மனோஜ் ஓ.எம்.ஆர் சீட்டை பார்த்தபோதும் 594 மதிப்பெண் காட்டியுள்ளது. Also read: துப்புரவு தொழிலாளி மகனின் மருத்துவ படிப்பிற்கு இரண்டாவது முறையாக நிதியுதவி வழங்கிய அறக்கட்டளை
இந்நிலையில், நேற்று வெளியான முடிவுகளில் 248 மதிப்பெண் மட்டும் காட்டியதால் மாணவர் மனோஜ் அதிர்ச்சியடைந்து, ஓ.எம்.ஆர் சீட்டை ஆய்வு செய்தபோது பழைய ஓ.எம்.ஆர் சீட்டின் முடிவுகளுக்கும் நேற்று வந்த முடிவுகளுக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. இதுகுறித்து புகாரளிக்க NTA டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டால் முறையான பதில் இல்லை எனவும், இதுவரை 5 முறை மெயில் மூலம் புகார் தெரிவித்திருப்பதாகவும் மாணவர் மனோஜ் தெரிவித்தார்.
மேலும், தற்போது உள்ள ஓ.எம்.ஆர் வேறு முடிவுகளைக் காட்டுவதாகவும், பழைய ஓ.எம்.ஆர். வேறு முடிவுகளை காட்டுவதாகவும் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாகவும் மாணவர் மனோஜ் கூறியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று நாடு முழுவதும் வெளியிடப்பட்டன. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில், NTA இணையப் பக்கத்திலிருந்து அந்த முடிவுகள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் மனோஜ் என்பவர் பீளமேடு நேசனல் மாடல் பள்ளியில் மாணவர் மனோஜ் 12ம் வகுப்பு முடித்தார். இவர் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு எழுதினார். அக்டோபர் 11ம் தேதி ஒ.எம்.ஆர் சீட்டில் வெளியான முடிவுகளைப் பார்த்துள்ளார். அதில் 594 மதிப்பெண்கள என காட்டியது. பின்னர் கடந்த 15ம் தேதி மீண்டும் ஒருமுறை மாணவர் மனோஜ் ஓ.எம்.ஆர் சீட்டை பார்த்தபோதும் 594 மதிப்பெண் காட்டியுள்ளது.