கோவையில் தொழிலதிபருக்கு கத்திக்குத்து... உறையவைக்கும் சிசிடிவி காட்சிகள்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் காரில் அமர்ந்து இருந்த ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 8:58 AM IST
  • Share this:
கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த ஜோய் என்பவர் கடந்த 14-ஆம் தேதி இரவு ஆர்.எஸ்புரம் பகுதிக்கு தனது காரில் சென்றுள்ளார். அங்கு காரில் அமர்ந்தவாறு தனது நண்பர் மற்றும் அவரின் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த ஜோய் மீது, கையில் கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர் கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் நிலை குலைந்த ஜோய் காரின் மற்றொரு பகுதியில் உள்ள கதவை திறந்து கீழே விழுந்தார். அப்போதும் விடாமல் அந்த நபர் ஜோயை கத்தியால் சரமாரியாக தாக்குகிறார். பின்னர் ஜோயின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதால் அந்த அடையாளம் தெரியாத நபர் ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் தயாராக காத்திருக்கும் மற்றொரு நபருடன் தப்பி செல்கிறார்.

இந்த காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது, ஜோய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்நிகழ்வு தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


மேலும் படிக்க...சென்னையில் 2 மேம்பாலங்களை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்முதற்கட்ட விசாரணையில் தன்னை தாக்கியவர்கள் யார் என்று தெரியாது என ஜோய் தெரிவித்துள்ளதால், முன் விரோதம் காரணமாக இந்த கொலைவெறி தாக்குதல் நடந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading